Photo-essays Kilinochchi District

We hope that there will not be another war

A mother of three from Kilinochchi speaks of the struggles she endured and the hope she holds in her heart

  • 1
    My children were 15, 16 and 17 then. We had a terrible time because of the shelling. We hid in bunkers. My husband would come out of the bunker to make us tea. One day when he stepped out to make us tea, he was struck by a shell and died.
    செல்வீச்சு காரணமாக மிகக் கஷ்டமான காலத்தினை அனுபவித்தோம். அப்போது எனது பிள்ளைகளுக்கு முறையே 15, 16, 17 வயது. நாம் பதுங்கு குளிகளில் ஒழிந்துகொண்டோம். எமக்கு தேனீர் தயாரிப்பதற்காக எனது கணவன் பதுங்கு குளியிலிருந்து வெள்யே வருவார். இப்படி ஒரு நாள் எமக்கு தேனீர் தயாரிப்பதற்காக வெள்யே வந்தபோது செல் தாக்கி மரணமானார்.
  • 2
    I take care of my children by working as a domestic servant. We get a monthly donation of Rs. 3000 from a foreign donor to help with their education. This really helps. My son did his A-levels but he won’t study further because he wants to work and help the other two children study.
    வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்து எனது பிள்ளைகளைக் காப்பாற்றுகிறேன். அவர்களது கல்விக்காக வெள்நாட்டு நிறுவனம் ஒன்றிடமிருந்து மாதந்தோறும் ரூபா 3000 நன்கொடையாகக் கிடைக்கிறது. இது உண்மையில் பெரிய உதவியாகும். எனது மகன் க.பொ.த.ப உயர்தரம் கற்றவர் ஆனால் மேற்கொண்டு படிக்க மறுக்கிறார். மற்றைய இரு பிள்ளைகளினதும் கல்விக்கு உதவுவதற்காக தான் வேலை செய்யவேண்டுமென விரும்புகிறார்.
  • 3
    We hope with all our hearts that there won’t be another war. I think it is unlikely to happen because we are surrounded by the Armed Forces. But they mind their business and we mind ours. They have set up some farms using local labour, but I am too afraid to send my children.
    இன்னொரு தடவை போர் ஏற்படாதென நாம் இதயசுத்தியுடன் நம்புகிறோம். எம்மைச் சூழ பாதுகாப்புப் படையினர் உள்ளதால் இது நடைபெறச் சாத்தியமில்லை என நான் நினைக்கிறேன். ஆனால் நாங்ககள் எங்களது வேலைகளைப் பார்த்துக்கொள்கையில் அவர்கள் தங்களது வேலையைப் பார்த்துக் கொள்கின்றனர். அவர்கள் கிராமத்துத் தொழிலாளர்களைப் பயன்படுத்திச் சில பண்ணைகளை உருவாக்கியுள்ளனர். ஆனால் நான் எனது பிள்ளைகளை அங்கு அனுப்புவதற்குப் பயப்படுகிறேன்.
  • 4
    I don’t feel angry about what happened to us, I feel terribly sad. It is very difficult to be self-reliant now. We had some goats. Now I just have a few chickens
    எங்களுக்கு நடந்தவைகள் பற்றி எனக்குக் கோபமில்லை ஆனால் மிகவும் துக்கமடைகிறேன். இப்பொழுது சுயநிறைவு அடைவது மிகக்கஷ்டம். எங்களிடம் முன்பு ஆடுகள் இருந்தன. இப்போது சில கோழிக்குஞ்சுகளே உள்ளன.
  • 5
    Now things are quiet, but we aren’t making too much progress. I’d like to be self-employed. I wish I had a sewing machine or some livestock. We would like to have a bicycle so that the children could travel to school more easily.
    இப்போது எல்லாம் அமைதியாகவுள்ளது ஆனால் நாம் அதிகளவு முன்னேற்றமடையவில்லை. நான் சுயதொழில் செய்யவே விரும்புகிறேன். ஒர தையல் இயந்திரம் அல்லது கால்நடை இருப்பின் விரும்பத்தக்கது. எனது பிள்ளைகள் இலகுவாகப் பாடசாலை செல்வதற்காக எமக்கு ஒரு துவிச்சக்கர வண்டி தேவையாக உள்ளது.