Vavuniya – Letter 27

Kadirgamar Welfare Centre

14-07-2012

 

Dear Sister, I am well. God will look after you.

 

I write this letter to inform you about our plight I have undergone. My husband died in Maththalan on account of a shell attack. This happened when we were going to Maththalan from Puthukudiyiruppu as we couldn’t stay there due to shell attacks and aerial bomb attacks. My two sons were grievously hurt and they cannot walk properly. I left my two sons and came to the army controlled area with my other 3 children. I was looking for my two sons everywhere, but I couldn’t find them. After 5 months one of them  joined us and the other is still in a detention camp. They kept him in Omanthai and afterwards he was taken to Tharmapuram Rehabilitation Centre. Then he was transferred to Pampaimadu Rehabilitation Centre. He was in Boose for 2 years. Afterwards they kept him in the Welikade Prison  for 3 months. Then he was in Maruthamadu Rehabilitation Centre for 1 month. Now he is detained in Polonnaruwa.

 

Now at Kadirgamar welfare centre I find it difficult to look after my four children. We cannot fulfil our daily needs. Their schooling remains a big problem. Now they provide us only the relief items. They give us 10 Kg of rice, 0.5 Kg of dry-fish and dhal, 0.5 bottle of coconut-oil and 600 grams of sugar as monthly rations. I find it very difficult   to fulfil our needs like clothes, schooling for the children, other food items and travelling to see my son who is in detention.

 

If we can return to our own place, things might be easier. We don’t have enough water. If we are resettled in our own area we can do something and live. Now in this camp our shelter has been blown away on account of strong wind. We have no protection from rain. Our life is miserable. We have our illnesses. We cook without coconut. If we are resettled then that is enough for us. Thieves also harass us. As I am a widow and we have no employment we have to face many challenges. I wrote this letter to inform you the situation we are facing.

 

I wish you well.

with love

Your sister

 

CWF/VI/VA/CHE/9/27

කදිර්ගාමර් සුබසාධන මධ්‍යස්ථානය.
2012.04.17
දෙවි පිහිටයි!
දයාබර නංගි,
මම හොදින් ඉන්නවා. අපිට සිද්ධ වෙච්ච දේවල් ගැනයි, අද අපි ජීවත් වෙන දුක්බර තත්ත්වය ගැනයි ඔයාට කියන්නයි මේ ලියුම ලියන්නෙ. මගේ මහත්තයා මාතලන් වලදි ෂෙල් වැදිලා මැරුණා. දිගටම ෂෙල් ගහන නිසයි, අහසින් බෝම්බ දාන නිසයි පුදුකුඩිරිප්පු ඉන්න බැරි නිසා අපි මාතලන් වලට යද්දි තමයි මේක සිද්ධ වුණේ. මගේ පුතාලා දෙන්නට දරුණු තුවාල සිද්ධ වුණා. ඒ දෙන්නට හරියකට ඇවිදගන්න බෑ. මං පුතාලා දෙන්නව තියලා අනිත් දරුවො තුන්දෙනාත් අරගෙන හමුදාව හිටපු ප්‍රදේශයට ආවා. මං හැමතැනකම පුතාලා දෙන්නව හෙව්වා. ඒත් මට එයාලව හොයාගන්න බැරි වුණා. මාස පහකට පස්සෙ එයින් එක පුතෙක් අපි ඉන්න තැනට ආවා. අනිත් එක්කෙනා තාමත් රැඳවුම් කඳවුරක. එයාව මුලින් ඕමන්තෙයි වල තියාගෙන ඉඳලා ඊට පස්සෙ ධර්මපුරම් පුනරුත්ථාපන කඳවුරට අරන් ගිහින් තියෙනවා. එතනින් එයාව පම්පෙයිමඩු පුනරුත්ථාපන කඳවුරට මාරු කරලා. එයා අවුරුදු දෙකක් බූස්සෙ හිටියා. එයින් පස්සෙ මාස තුනක් වැලිකඩ හිරගෙදර හිටියා. එතනින් මරදමඩු පුනරුත්ථාපන කඳවුරට මාරු කරලා එතන මාසයක් තියාගත්තා. දැන් එයාව පොළොන්නරුවේ රඳවාගෙන ඉන්නවා.
දැන් අපි ඉන්නෙ කදිර්ගාමර් සුබසාධන කඳවුරේ. මට දරුවො හතරදෙනාව රැකබලාගන්න හැටියක් නෑ. අපිට එදාවේල කන්න අඳින්න දෙයක් ලැබෙන්නෙ නෑ. ළමයින්ට උගන්නගන්න විදිහක් නෑ. දැන් අපිට ලැබෙන්නෙ සහනාධාර විතරයි. මාසෙක සලාකෙට අපිට දෙන්නෙ හාල් කිලෝ දහයකුයි, කරවල ග්රෑම් 500යි, පරිප්පු ග්රෑම් 500යි, පොල්තෙල් බාගයයි, සිනි ග්රෑම් 600 කුයි විතරයි. අනිත් කෑම බීම, ඇඳුම්, දරුවන්ට ඉස්කෝලෙට ඕන කරන දේවල්, ගන්න ඕනෙ. කඳවුරේ ඉන්න පුතාව බලන්න යන්න ඕනෙ. ඒවාට ඕන කරන වියදම් හොයාගන්න මං දහදුක් විඳිනවා.

අපිට අපේ ගමට යන්න පුළුවන් නම් හැමදේම මීට වඩා ලේසි වෙයි. අපිට ඇති තරම් වතුරවත් නෑ. අපිව අපේ ගම්වල පදිංචි කරනවනවනම් අපිට මොනවහරි කරලා ජිවත්වෙන්
න පුළුවන්. තද සුළඟට අහුවෙලා අපේ ටෙන්ට් එකේ වහලෙත් ගහගෙන ගියා. දැන් අපිව වැස්සටත් තෙමෙනවා. අපේ ජිවිත එකම දුක් ගොඩක්. අපි ලෙඩ වෙනවා. අපි උයන්නෙ පොල් නැතුව. අපිව ගම්වල පදිංචි කරවනවනම් අපිට ඒ ඇති. හොරුන්ගෙනුත් අපිට කරදරයි. මහත්තයත් නැතුව තනියම ජිවත්වෙන මට, රස්සාවකුත් නැතුව කරදර ගොඩකට මූණ දෙන්න වෙලා තියෙන්නෙ. අපි ජීවත් වෙන තත්වෙ මේකයි කියලා කියන්නයි මං මේ ලියුම ලිව්වෙ.ඔයා හොදින් ඉන්න.

මීට,
දයාබර අක්කා.

 

கதிர்காமர் நலன்புரிநிலையம்

14.07.2012

அன்புள்ள தங்கை அறிவது நான் நலம் அதுபோல் நீங்களும் வாழ இறைவன் துணைபுரிவார்.

மேலும்! நான் இதுவரை காலமும் நான் பட்ட செல்ல முடியாத துன்பங்களை உங்களுக்குச் சொல்லலாம் என நினைத்துள்ளேன். புதுக்குடியிருப்பிலிருந்து செல் வீச்சுஇ விமானத் தாக்குதல் காரணமாக மாத்தளன் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்ற போத எனது கணவர் செல்வீச்சில் மாத்தளனில் மரணமடைந்தார். அத்துடன் எனது இரண்டு மகன்களும் படுகாயப்பட்டு இரண்டு மகன்மாரும் நடக்கமாட்டாத நிலையில் காணப்பட்டனர். நாம் மகன்மாரை வீட்டு நாம் இராணுவக் கட்டப்பாட்டுக்குள் நானும் மூன்று பிள்கைகளும் வந்துவிட்டோம். பின்பு எனது இரண்டு மகனையூம் தேடி எங்கையூம் கிடைக்கவில்லை. பின்பு 5 மாதங்களின் பின்பு எம்மிடம் ஒரு மகன் வந்துவிட்டார். மற்ற மகன் தடுப்பு முகாமில் இப்போதும் வாழ்ந்து வருகின்றார். எனது மகனை ஓமந்தை தடுப்பு முகாமில் வைத்துள்ள பின்பு தருமபுரம் புணர்வாழ்வூ நிலையத்திற்கு கொண்டு சொல்லப்பட்டார். பின்பு பம்பைமடு புணர்வாழ்வூக்க கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ஓமந்தைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் 2 வருடம் பூசாவிற்கு கொண்டு சென்றனர். பின்னர் 3 மாதம் வெளிக்கடை சிறைச் சாலையில் வைத்திருந்தனர். மருதமடு புணர்வாழ்வூ நிலையத்தில் 1 மாதம் வைக்கப்பட்டு பின்னர் பொலனறுவையில் இப்போது வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் எமக்கு வேலைகள் ஒன்றும் இல்லாது எமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யமுடியாத நிலையிலும் நான்கு பிள்ளைகளையூம் வளர்க்க மிகவூம் சிரமப்படுகின்றேன். அத்துடன் கல்வி கற்பிப்பதற்கு மிகவூம் சிரமப்படுகின்றேன். இப்போது நிவாரணம் மட்டுமே தருகின்றனர். அதில் 10 கிலோ அரிசிஇ சீனி – 600 கிராம்இ தேங்காய் எண்ணை  இ கருவாடுஇ பருப்பு ஒரு மாதத்திற்கு இவ்வளவூ பொருட்களுமே கிடைக்கின்றது. பருப்பு சமைக்க முடியாத கடலைப்பருப்பு கிடைக்கின்றது. உடுப்புகள்இ கல்வி நடவடிக்கைஇ ஏனைய உணவூப்பொருள் தடுப்பில் உள்ள மகனைப் பார்க்கச் செய்வது எல்லாம் எனக்கு மிகவூம் சிரமமாக உள்ளது.

எமது சொந்த இடத்தில் இருந்தால் ஓர் அளவூ சிரமம் குறைவாக இருக்கும். அத்துடன் தண்ணீர் மிகவூம் சிரமமாக உள்ளது. அத்துடன் எமது சொந்த இடத்தில் செல்லவேண்டும். அங்கு சென்றால் தொழில் ஏதாவது செய்து எமது வாழ்க்கையை நடத்தலாம். இப்போது எமது முகாம் வீடு காற்றடித்தால் அது எல்லாம் டிடுபட்டு விட்டு. மழை நீர் வழியூம். இவ்வாறு துன்பப்பட்ட எம்மை அனுப்பி வைத்தால் போதும். சொந்த இடத்தில் வருந்தங்களும் துன்பங்களையூம் சுமந்து வருகின்றௌம். தேங்காய் இல்லாது உணவூ சமைத்து உண்டு வருகின்றௌம்.

கள்ளரின் தொல்லையூம் அதிகமாக உள்ளது. கணவர் இல்லாததால் தொழில் இல்லாததால் மிகவூம் துன்பப்பட்டு வருகின்றௌம். இதுவே நாம்பட்டதும் பட்டுக் கொண்டு இருக்கும் துன்பமாக உள்ளது என்பதை அறியத்தந்துள்ளேன். இத்துடன் எனது துன்ப மடல் முடிக்கின்றேன்.

நன்றி

அக்கா.