Roots
My name is S. Anulawathie. I live in Okkampitiya. I live with my two daughters and son. After the death of my husband, my mother and other members in the family built this house for me.
I have two elder sisters, two elder brothers, one younger sister and one younger brother. There are 7 children altogether in the family. Everybody looks after me all the time.
I am from Badulla. My parents are also from Badulla. I went to school in Badulla.
My sister was married off to Okkampitya. I met my husband when I went there to visit my sister. We were in love for four years and got married.
My husband was doing business. When he was alive, he looked after me very well.
I have undergone a surgery on my spinal code. I had to attend the clinic for two years.
Ground
After having a love affair for four years, and bringing three children to the world, today I live alone. If I knew that this would be my fate, I would have not got married.
Recently 120 Tamil people have been given a training in the camp. My son said ‘ why these people who did so much harm to us are treated very well like this?’
I had never done labor work before. But after the death of my husband, I had to work for daily wage.
My son is still very angry about what happened to his innocent father.
My elder daughter is 22 years old. She got married recently.
My son is 19 . He joined the Air Force.
Now I do farming for the living. I live amidst financial problems.
Bark
The day was 16th January 2008. Keeping me at my parents place, my husband went to the market to buy vegetables.
We never realized the horror of war when we were in Badulla.
I wailed saying that my husband sent to the market. I asked to take me to the hospital. I thought that he had only been injured. I never thought that he had died.
Sister’s daughter said that there was a bomb explosion in Buttala.
I lost my consciousness at that moment. My worry is about my children.
Government representatives came, took photos of the children, promised hundred things including scholarships for children’s education and left. But we received nothing.
While we were living on our own, raising our children, my husband’s life was destroyed by the LTTE attack. Since my husband was not in the Army, we didn’t receive anything.
When the government forget us, who live so desperately and do everything for the Tamils in the North, we feel so sad. We are not angry with them. They are also innocent. Every Tamil is not a terrorist.
Branches
It is good that my son has a job. But since he is in the Air Force, I am worried about his safety.
I wish that nobody will experience tragedies like this.
I wish to give a good education to my daughter.
I wish that my daughter will get married to a good person one day. But then I will be left alone. It is good if I have a self employment.
Leaves
My family is my strength. They call me several times a day to ask how I am. Once a month, my mother comes to see me. I am fortunate to have such a loving family.
My husband is Amarapala. He was a kind hearted man. He loved us so much.
My husband’s elder brother still looks after us.
Fruits
It is a great thing that the war was over. When I see other children with their fathers I feel sad. I wish my children had their father with them.
I am happy that I married off my daughter. Although she studied well, she has not got a job yet. But I am happy that she is married.
Roots
எனது பெயர் எஸ.; அனுலாவத்தி. எனது வசிப்பிடம் ஒக்கம்பிட்டிய. எனது இரண்டு மகள்மார்களுடனும் மகனுடனும் வாழுகின்றேன். எனது கணவனை இழந்த பின்னர் தற்போது நான் குடியிருக்கும் வீடு எனக்கு வழங்கப்பட்டது. எனது தாயார் உட்பட குடும்பத்தினரின் உதவியோடு நான் இப்போது வாழும் வீடு உருவாக்கித் தரப்பட்டது.
எனக்கு இரண்டு அக்காமார், இரண்டு அண்ணாமார், ஒரு தங்கை ஒரு தம்பி. குடும்பத்தில் எல்லாமாக ஏழு பேர். எனவே எல்லோரும் என்னைப்பற்றி விசாரிப்பார்கள்.
நான் பதுளையைச் சார்ந்தவள். எனது தாயும் தந்தையும் பதுளையைச் சார்ந்தவர்கள். நான் ஏழாம் ஆண்டு வரை பதுளை பாடசாலையில் படித்தேன்.
எனது அக்கா ஒக்கம்பிட்டியவில் திருமணம் செய்து வாழுகின்றார்.
எனது கணவர் வியாபாரம் செய்தார். அவர் வாழும்போது எம்மை நன்கு கவனித்துக் கொண்டார்.
எனது முதுகெலும்புப் பகுதியில் இருந்து ஒரு பகுதி அகற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகள் நான் மருத்துவமனைக்குச் சென்றேன்.
Ground
நான்கு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தேன். இப்போது மூன்று பிள்ளைகளுடன் இவ்வர்;றாக கஸ்டப்பட நேரும் என்று முன்னர் அறிந்திருந்தால் திருமணம் செய்திருக்கவே மாட்டேன்.
நான் எனது வாழ்க்கையில் கூலித் தொழில் செய்யாவிட்டாலும் கணவனை இழந்த பின்பு பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு கூலித் தொழில் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டேன்.
எனது சின்ன மகள் க.பொ.த. சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றுகிறார். எனது மூத்த மகளின் வயது 22. அவர்; அண்மையில் திருமணம் செய்தார்.
எனது மகனின் வயது 19. அவர் விமானப் படையில் சேர்ந்தார்.
நான் தற்போது விவசாயம் செய்து வாழுகின்றேன். ஆனால் வாழ்க்கை மிக நெருக்கடியாக இருக்கின்றது.
Bark
2008 ஜனவரி 16 ஆந் திகதி அன்று காலையில் என்னை அம்மா வீட்டில் விட்டுவிட்டு கணவர் காய்கறிச் சந்தைக்குச் சென்றார்.
யுத்தத்தின் பாரதூரமான தன்மை நாம் பதுளையில் வாழ்ந்தபோது அறியமுடியவில்லை.
எனது கணவர் சந்தைக்குச் சென்றார் என நான் சத்தமிட்டேன். என்னை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினேன். யாராவது வரும்வரை பல மணி வரை காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. காயம் ஏற்பட்டிருக்கும் என நான் நினைத்தேன். அவர் இறந்து இருப்பார் என நான் ஒருபோதும் எண்ணவில்லை.
புத்தல பிரதேசத்தில் ஒரு குண்டு இருக்கின்றது என அக்காவின் மகள் அறிவித்தார். மூன்று பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டும் எனவும்; கூறப்பட்டது.
அரசாங்க தரப்பில் இருந்து வரவேண்டியவர்கள் அனைவரும் வந்து விட்டனர். படம் பிடித்தனர். பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் தருவதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை ஒன்றுமே கிடைக்கவில்லை.
இப்படியாக, நிர்க்கதியாக இருக்கும் எம்மை மறந்து, வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவி செய்யப்படுகின்றது. அரசு எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுக்கும்போது கவலையாக இருக்கிறது. மனதில் பகை உணர்வு தோன்றவில்லை. அவர்களும் நிர்க்கதியான நிலையில் இருப்பதால் எல்லோரும் விடுதலைப் புலிகளையே வெறுக்க வேண்டும்.
Branches
மகன் இராணுவத்தில் சேர்ந்ததையிட்டு சந்தோஸப்படுகின்றேன். மகன் இப்போது தந்தையைப்பற்றி யோசிக்கிறார்.
இதைப்போன்ற துன்பத்தை எவருமே அனுபவிக்கக் கூடாது.
மகனுக்கு ஒரு தொழில் இருக்கின்றபடியால் சின்ன மகளை நன்கு கற்பிக்க வேண்டும்.
எனது சின்ன மகளும் நல்ல இடத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்பது எனது பிரார்த்தனை. ஆனால் அப்படி நடந்தால் நான் தனிமைப்பட்டு விடுவேன். எனக்கு என்ன நடக்கும். எனக்கு சுயதொழில் இருந்தால் நல்லது. பெண் பிள்ளையைத் தனியாக விட்டுப் போக முடியாது.
Leaves
எனது குடும்பத்தவர்கள் ஒரு நாளில் பலமுறை பேசி தொல்லை கொடுப்பார்கள். மாதமொருமுறை அம்மா வருவார். அத்தகைய அன்புள்ளம் படைத்த குடும்பத்தை வேறெங்கும் காண முடியாது.
எனது கணவரின் பெயர் அமரபால. அவர் மிகவும் நல்லவர். எம்மை சிறப்பாக நேசித்தார். கருணை உள்ளம் கொண்டவர்.
தொடர்ந்தும் எனது கணவரின் அண்ணா பல உதவிகளைத் தொடர்ந்து செய்கிறார்.
Fruits
தற்போது யுத்தம் ஓய்ந்ததையிட்டு மகிழ்ச்சி. ஆனால் அயலவர்களின் வீடுகளில் உள்ள பிள்ளைகள் அப்பா என்று அழைக்கும்போது எமது பிள்ளைகளுக்கும் தந்தை இல்லாத சோகம் நன்கு புலனாகின்றது.
மகளை திருமணம் செய்து வைப்பது மகிழ்ச்சிகரமானது. இருவரும் கல்வி கற்று இருந்தாலும் தொழில்கள் இல்லை. ஆனால் திருமணம் செய்தது நல்லது.
எனக்கு இடுப்பு வலி இருப்பதன் காரணமாக பாரம் சுமக்க வேண்டாமென வைத்தியர்கள் ஆலோசனை கூறினார்கள்.
மகனைப்பற்றி கவலைப்படுகின்றேன். மகன்; எவருக்குமே கஸ்;டம் கொடுப்பதில்லை. எவருக்கும் துன்பம் செய்யாத தந்தை எதிர்நோக்கிய நிலைமை குறித்து தொடர்ந்தும் கவலைப்படுகிறார்.
ஒக்கம்பிட்டிய காட்டுப் பகுதியல்ல. எனவே எமக்கு எதுவித தெரிவும் இருக்கவில்லை.
அச்சந்தர்ப்பத்தில் எனது மூளை வேலை செய்யவில்லை. பிள்ளைகளைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட்டேன்.
மருத்துவமனை தொழிலாளர் பதவியாவது எமக்குக் கிடைக்கவில்லை.
எமக்கு சிங்கள புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த சம்பவத்தை ஞாபகப்படுத்த நாம் விரும்பவில்லை.
மகனுக்கு ஒரு தொழில் இருந்தால் நல்லது. ஆனால் , விமானப்படை சிப்பாய் என்ற காரணத்தினால் எனது மனதிற்கு பெரும் தொல்லையாக இருக்கின்றது.