I want to go to school
A young girl, who is in a wheelchair for the rest of her life as a result the war. Her story and that of her mother is one of hope.
-
|
My father died in the war. I have two sisters and a brother. My brother is a labourer. My sister also works. I studied only up to grade 7. I injured my leg in grade 7 at 13 years so I had to stop going to school. I was struck on my spine by a shell. So I can’t walk. My mother was also a little injured then. I want to go back to school. I want to study and then decide based on the opportunities I get about what I will do with my education.
எனது தகப்பனார் போரில் இறந்தார். எனக்கு இரு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உண்டு. எனது சபோதரர் ஒரு கூலித்தொழிலாளி. எனது சகோதரி ஒருவரும் வேலைக்குச் செல்கிறார். நான் 7ம் வகுப்பு வரை கல்வி கற்றிருக்கிறேன். எனக்கு 13 வயதாயிருக்கையில் 7ம் வகுப்பில் கற்கையில் காலில் காயமுற்றேன். எனவே நான் பாடசாலைக்குச் செல்ல முடியாமற்போனது.எனது முள்ளந்தண்டில் செல்தாக்கியதால் என்னால் நடக்க முடியாது.
|
-
|
Because I can’t walk, I do get angry. I was wounded in the war and I get angry at that. But I am also resigned to what has happened. What else can I be?
என்னால் நடக்க முடியாதாகையால் எனக்குக் கோபம் வருவதுண்டு. நான் போரின்போது காயமுற்றதால் அதன்மீதும் எனக்குக் கோபம். ஆனால் நடந்ததை ஏற்றுக்கொள்கிறேன். என்னால் வேறு என்ன செய்ய முடியும்.
|
-
|
We are in a very sad situation. I would like it if someone can help me follow computer classes somewhere. I’d have to take a three-wheeler there so I’d need some financial help. I don’t even have a commode toilet, so things are difficult.
நாம் மிகவும் துக்ககரமான நிலையில் உள்ளோம். எங்காவது கணினி வகுப்புக்களில் இணைந்துகொள்வதற்கு யாராவது உதவிசெய்தால் எனக்கு விருப்பம். அங்கு செல்வகொதாயின் எனக்கு முச்சக்கர வண்டி தேவை. எனவே இதற்குப் பணவுதவி தேவை. கொமோட் இருக்கையுள்ள கழிவறைகூட எம்மிடம் இல்லாததால் மிகக் கஷ்டத்தை அனுபவிக்கிறேன்.
|
-
|
If we could set up a shop we could all work together. My mother and sister take care of me.
சிறியதோரு கடையினை நாம் போட்டுக்கொண்டால் நாம் எல்லோரும் இணைந்து வேலைசெய்யலாம். எனது தாயாரும் சபோதரியும் என்னைக் கவனித்துக் கொள்கிறார்கள்.
|
-
|
I want to go back to school too, that’s important. I want to go to school, but I have problems, I am incontinent, so that is a problem. I have also lost my schoolbooks because we were moving from place to place.
நான் மீண்டும் பாடசாலை செல்ல விரும்புகிறேன் அது மிகவும் முக்கியம். ஆனால் எனக்குப் பல பிரச்சினைகள் உண்டு. என்னிடம் நாவடக்கம் கிடையாது எனவே இது ஒரு பிரச்சினை. நாம் இடம் விட்டு இடம் பெயர்ந்ததால் எனது பாடசாலைப் புத்தகங்களைத் தொலைத்து விட்டேன்.
|
-
|
My mother was also a little injured then. I want to go back to school. I want to study and then decide based on the opportunities I get about what I will do with my education.
முன்பு எனது தாயாரும் சிறிது காயமடைந்திருந்தார். மீண்டும் பாடசாலைக்குச் செல்ல விரும்புகிறேன். நான் முதலில் கல்வி கற்றுப் பின்னர் கிடைக்கும் வாய்ப்புக்களின் அடிப்படையில் நான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் எனத் தீர்மானிப்பேன்.
|