I hold no hatred or ill will
A mother who has lost her son to the war, speaks of her love for her son and her hope for the future
-
|
During the war we lived in fear. When the LTTE attacked a bus in Okkampitiya, the kids in the village got on to their bikes and went to the scene. Something happened to my son there. His heart changed. He became part of a village protection force that the young men formed. They made their own weapons. It was then that he joined the Army. I told him “it’s war now, and you will definitely be sent out to fight”. He told me it’s something that had to be done. He was 18 then.
போர்க் காலத்தில் நாம் பயத்துடன் வாழ்ந்தோம். ஒக்கம்பிட்டியவில் பேருந்து ஒன்றினை எல். ரீ. ரீ. ஈ. யினர் தாக்கியபோது எமது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் துவிச்சக்கர வண்டிகளில் இவ்விடத்திற்கு விரைந்தார்கள். எனது மகனிற்கு அங்கு ஏதோ நடந்திருக்கிறது. அவர் மனம் மாறிவிட்டார். இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய கிராமப் பாதுகாப்புக் குழுவில் அவர் ஒரு அங்கமாகிவிட்டார். அவர்கள் தமது ஆயுதங்களை உருவாக்கினர். அக்காலத்தில் அவர் இரர்ணுவத்தில் இணைந்தார். இப்போது போர் நடக்கிறது, உன்னைக் கட்டாயமாக போர்புரிவதற்கு வெளியே அனுப்புவார்கள் என்று நான் கூறினேன். ஏதாவது செய்யவேண்டுமென அவர் என்னிடம் கூறினார். அவருக்க அப்போது 18 வயது.
|
-
|
He was killed 5 days before he was due to come home for only his second vacation. He was in the Army only 9 months when he died. He was 19. It’s been 4 years since he died. He is one of six children. He was clever and skilled. He was never lazy. He was a great artist. When I think of him I feel a great sense of sadness.
அவரது இரண்டாவது விடுமுறைக்கு அவர் வீட்டுக்கு வரவிருந்த நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு அவர் கொல்லப்பட்டார். அவர் இறக்கும்போது அவர் இராணுவத்தில் இணைந்து 9 மாதங்களே கடந்திருந்தன. அப்பொது அவருக்க 19 வயது. இப்போது அவர் இறந்து 4 வருடங்கள் கழிந்துவிட்டன. அவர் எனது ஆறு பிள்ளைகளில் ஒருவர். அவர் திறமையும் சாதுரியமு்ம் உள்ளவராக இருந்தார். அவர் சோம்பேறியாக இருந்ததில்லை. ஒரு சிறந்த படம் வரைஞர். அவரை நினைக்குப் பொதெல்லாம் எனக்கு மிகுந்த துக்கம் உண்டாகிறது.
|
-
|
It’s good that the war has stopped. How many dead bodies were brought to our village? They were all young lives lost. We are grateful to the President for stopping the war.
போர் முடிந்தது மிகவும் நல்லது. எங்களது கிராமத்திற்கு எத்தனை பிரேதங்கள் கொண்டுவரப்பட்டன? அவையெல்லாம் உயிர்பறிக்கப்பட்ட இளைஞர்களதுவாகும். போரை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு நாம் ஜனாதிபதிக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
|
-
|
Sometimes I feel a sense of respect from people because my son fought for the country. But the pain I feel subsumes everything else. Yet, I recognize that he did a noble thing for the country. I pray and wish that he would always have a long life in his future births.
எனது மகன் நாட்டிற்காகப் போரடியதனால் மக்களின் மரியாதைக்கு உரியவராக உணர்கிறேன். ஆனால் எனக்கு ஏற்பட்ட வலி இவற்றையெல்லாம் மறைத்துவிடுகிறது. ஆயினும் நாட்டுக்காக அவர் உயரிய சேவையினை வழங்கியிருக்கிறார் என்பதனை நான் உணர்கிறேன். இனிவரும் அவருடைய எதிர்காலப் பிறப்புக்களில் நீண்ட ஆயுளைப் பெறவெண்டும் என நான் ஆசைப்படுகிறேன் பிரார்த்திக்கிறேன்
|
-
|
We get all the allowances that are due to us for our child. We went to on a pilgrimage with it and all the merit from that prayer went to my son. It’s with his money that we are meeting our daughter’s education expenses. But we are reminded of our son all the time and that makes us sad.
எமது பிள்ளை சார்பில் எமக்குச் சேரவேண்டிய உதவிப்பணங்கள் அனைத்தும் எங்களுக்குக் கிடைக்கின்றன. அதன்மூலம் நாம் கோவில் தலங்களுக்கு யாத்திரை சென்றோம். எமது பிரார்த்தனையின் பலன்கள் யாவும் அவருக்குக் கிட்டும். இப்பணத்தின் உதவியுடன் எமது மகளின் கல்விச் செலவுகளை ஈடுசெய்கிறோம். எமது மகனின் ஞாபகம் எப்போதும் வருகிறது. இதனால் நாம் மிகவும் துக்கமடைகின்றோம்.
|
-
|
Before our son died we had Tamil friends who’d visit our home, but when this happened they visited us less. Now we are good friends again. What are they to do? They are innocent of any wrongdoing. I harbor no hatred or ill will.
எங்கள் மகன் இறப்பதற்கு முன்னர் எமது வீட்டுக்கு வருகின்ற தமிழ் சிநேகிதர்கள் இருந்தனர். ஆனால் இது நடந்தபின் பின்னர் அவர்களின் வரவு குறைந்தவிட்டது. இப்போது நாம் மறுபடியும் நல்ல நண்பர்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் பிளையேதும் செய்யாத நல்லவர்கள். என்னிடம் தீய எண்ணமோ அல்லது வெறுப்போ கிடையாது.
|