I want the best for my children
A mother of three from Kilinochchi speaks of her struggle to survive and wishes for a better future
-
|
I have three children. We had a terrible time during the war, no food, no water. We were in Manukulam when a shell struck my husband. I was 22 when he died. We lived in a refugee camp in Chettikulum for about a year after that. When their father died I told my children that they should not worry because I will take care of them. I always do my best to provide them with what they need.
எனக்கு மூன்று பிள்ளைகள். போர்நடந்த காலத்தில் உண்ண உணவோ குடிநீரோ இல்லாது நாம் மிகக் கஷ்டத்தை அனுபவித்தோம். நாம் மாங்குளத்தில் இருந்தபோது எனது கணவர் செல்லடிபட்டார். அவர் இறக்கும்போது எனக்கு 22 வயது. அதன் பின்னர் ஒரு வருட காலமாக நாம் செட்டிகுளத்திலுள்ள அகதி முகாமில் வசித்தோம். தகப்பன் இறந்தபோது எனது பிள்ளைகள் எதற்கும் கவலைப்படக்கூடாதெனவும் நான் அவர்களைப் பராமரிப்பேன் எனவும் கூறினேன். அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதற்கு நான எப்போதும் என்னாலானதைச் செய்வேன்.
|
-
|
When my husband was alive we were quite content, we lived fairly well. We managed.
Now I make a living as a labourer. I work in a school. I also do some cooking there. I don’t have a regular salary. I am also able to bring some leftover food home for my children.
எனது கணவர் உயிருடனிருந்தபோது நாம் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தோம். நான் இப்பொழுது கூலிவேலை செய்கிறேன். பாடசாலை ஒன்றில் வேலை செய்வதுடன் அங்கு சமையல் வேலையும் செய்கிறேன். எனக்கு ஒழுங்கான சம்பளம் கிடையாது. அங்கு மீதமான உணவுகளை எனது பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்காக வீட்டுக்க எடுத்துவர முடிகிறது.
|
-
|
My daughter knows to sew. She is 21. She got a sewing machine from the church. So she makes a little money through her sewing. My son is 19 – he is a wage-labouror. He is learning to be a mason. The other son is 18 but because there is no money for him to study he wants to get a job.
எனது மகளுக்கு 21 வயது. அவளுக்குத் தைக்கத் தெரியும். தேவாலயத்திலிருந்து தையல் இயந்திரம் ஒன்று அவளுக்குக் கிடைத்தது. தையல் வேலையின மூலம் சிறிதளவு பணம் சம்பாதிக்கிறாள். எனது மகனுக்கு 19 வயது. அவர் நாட் கூலிக்கு வேலைசெய்கிறார். மேசனாக வருவதற்கு தொழில் கற்கிறார். மற்றைய மகனுக்கு 18 வயது. அவருக்குத் தொடர்ந்து படிப்பதற்குப் பணம் இல்லாமையால் வேலை ஒன்று தேடிக்கொள்ள விரும்புகிறார்.
|
-
|
Today I am concerned about my daughter’s dowry. This is a big worry for me. Things haven’t changed, people still ask for dowry. If I want a boy with a government job I need to pay a higher dowry, it’s like that. If his job is not that great I don’t have to pay so much. My daughter worries all the time about this.
இப்போது எனது கவனம் எல்லாம் எனது மகளிற்கான சீதனம் பற்றியே. இது எனக்குப் பெருங் கவலையாக உள்ளது. நிலமைகள் இன்னமும் மாறவில்லை, மக்கள் இப்போதும் சீதனம் கேட்கிறார்கள். அரசாங்கப் பணியிலுள்ள ஒருவரை வரனாகத் தேடுவதாயின் அதிகளவு சீதனம் நாம் செலுத்தவேண்டும். அவர் பெரிய பணியில் இல்லாவிடில் நாம் அவ்வளவாக சீதனம் கொடுக்கத் தெலையில்லை. இதைப்பற்றி எப்பொதம் எனது மகள் கவலையடைகிறாள்.
|
-
|
I want the best for my children. They need to live well. The NGO Vivekenandan is helping us to build a house. We are doing it gradually. We are devotees of God Murugan. We seek solace from him. We pray to him so that our wishes will come true.
எனது பிள்ளைகளுக்குச் சிறந்தவற்றை அளிக்க விரும்புகிறேன். அவர்கள் சிறப்பாக வாழவேண்டும். விவேகானந்தம் என்னும் அரசுசாரா நிறுவனம் எமக்கு வீட கட்டுவதற்கு உதவி புரிகிறது. நாம் படிப்படியாக அதனைச் செய்கிறோம். நாம் இறைவன் முருகனின் பக்தர்கள். நாம் அவரிடம் ஆறுதலடைகிறோம். எமது ஆசைகள் நிறைவேறுவதற்காக அவரைப் பிரார்த்திக்கிறோம்.
|
-
|
Things are getting better now. Change is slow but it is happening. We are able to go to places we were never able to before. I think it is important that all communities live in friendship in future.
விடயஙங்கள் இப்பொது முன்னேற்றமடைந்து வருகின்றன. மாற்றங்கள் மெதுவாகவாயினும் இடம்பெறுகின்றன. நாம் முன்பு ஒருபொதும் போகமுடியாதிருந்த இடங்களுக்கெல்லாம் போகக்கூடியதா உள்ளது. எதிர்காலத்தில் அனைத்துச் சமூகங்களும் சிநேகத்துடன் வாழவேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன்.
|