Kurunegala Letter 208

I got married when I was 21 years old. The marriage was arranged by my parents. By then a brutal war was going on in Sri Lanka. My husband to be was in the Army. That was a time the war was intensifying. My husband to be lost his right leg due to a mine bomb explosion. I was not matured then. I was taken to the Army hospital in Colombo to see him. I was scared to look at him. It was after hours that I turned to look at his bed. After several months he left the hospital. He was brought to my house to see me. He came with his family members. He spoke with me. I felt sorry for him. My expectation was to complete the education and find a job before getting married. I didn’t want to get married without having a job. That was my target. But all those things changed gradually. Finally both families decided that we should get married. I gave my consent, because I felt sorry for him. I wanted to do a job and live well. I had no idea that he was getting a salary. We got married with the blessings of parents of both sides. After the marriage, I was taken to his place. I lived happily with them. He came home only once a week in a month.

One of my husband’s friends was working in the Singer company in Pilimathalawa. I was trained for to work there. I did everything to my best, so I got a job in Singer. By then I was pregnant with my elder daughter. It was one year after our marriage. I heard that applications were been called from the soldiers who didn’t have houses. I filled the form and after 8 months, we got a house in Ibbagamuwa. We came to live in that house with our daughter. I kept one of my aunties with me for some time. I had never lived alone in a house before. My husband went back  to work. It is very hot here. A strange environment. There  were no many people I knew here. I was not used to talking with unknown males. But after some time, I got used to the new environment. But members of my family don’t like much to come here from Kandy. Sometimes they blame us, asking why we came to live here. When my eldest daughter was 5 years old, I enrolled her in the preschool in this village. She got selected to a good school after that. By this time my husband was allowed to leave the army on the medical reasons. After he resigned from the army, we renovated our house. My family members don’t  like to stay here when they come, so we wanted to improve the house a bit. Then I was pregnant with my second daughter. I delivered her in Kurunegala hospital. She was born 8 years after our marriage. We both do the household chores together. When working in the garden, my husband and I help each other. He does everything for us, like going to the grocery store, paying the electricity bills and telephone bills, taking the kids to the school etc. He doesn’t let me go anywhere alone. My parents requested him to look after me well.  Even to date, he is keeping his promise.

 

It is more than 22 years since our marriage now. We have never had arguments. We always discuss everything and take decisions together. Now my eldest daughter is 20 years old. She is waiting for the results of A/Ls. We did our best to give her a good education. She does any hard work at home like a man. Second daughter studies in grade 9. She is good at studies. The youngest son is in grade 3.

 

My husband is 42 years old now. Now he is not fit enough to do hard work. When we go somewhere  or take a walk, he always stays in the vehicle. I feel sad for him then. He always feel the loss of his leg. Whenever he tries to pluck nuts from the trees, when the roof is leaking, when the water tank should be cleaned, he feels his disability. It is my elder daughter who looks after all these things. She is like a boy. My younger daughter is clever at her studies. By now, we have saved money for the children and fulfilled all the responsibilities as parents. The artificial legs my husband receives now are not of a good standard. We go to Ragama twice a year to mend the artificial leg. But they are not strong. They break easily. My husband’s  leg has got worse because of using poor quality artificial legs for a long time. We all feel the pain he is suffering from. We live happily but there are moments when  that happiness fades away. When my husband falls, when he goes to the toilet with lot of difficulty, and when he is injured, we all get worried and feel sad. We now don’t like to go out much because it is difficult for my husband to use a toilet which has no commode.

However, we are satisfied with life when we think of our children.

මට අවුරුදු 21 දී ගෙදරින් ආ යෝජනාවකි. ඒ වන විට ලංකාවේ තිබුණේ කුරිරු යුද්ධයකි. මගේ ස්වාමි පුරුෂයා වශයෙන් ගෙදරින් කතා කළ කෙනාගේ රැකියාව යුද හමුදාවේ සිටි කෙනෙකි. මේ කාල වකවානුවේදී හරිම යුද්දය වැඩි කාලයයි. මේ කාලය ගෙවීගෙන යන අතරතුර මගේ ස්වාමියා වශයෙන් තෝරාගෙන සිටි කෙනාගේ කකුල බිම් බෝම්බයකට හසු වී දකුණු පාදය දණහිසෙන් පහළ කොටස කපා ඉවත් කිරීමට සිදු වුණා. මේ කාලයේදී මට වැඩිය තේරුමකුත් නෑ. මම මෙයාව බලන්න ආමි රෝහලට කොළඹට එක්කගෙන ගියා. මට එයා දිහා බලන්න බය හිතුණා. පැය ගාණක් ගියාට පසුවයි මම එයා සිටි ඇඳ දෙසට හැරී බැලූවේ. මාස ගානක් ගියාට පසුව එයා රෝහලේ සිට ගෙදර ගියාට පසුව මාව බලන්න අපේ ගෙදරටද එකතු කරගෙන ආවා. එයා මා සමග කතා කළා. එයාලගෙ ගෙදර අයත් සමගයි අපේ ගෙදර ආවේ. මට පවු කියලා හිතුණා. මොකද මම හිතාගෙන හිටියේ පාසල් ගිහිල්ලා හොඳට රැකියාවක් කර බඳිනවා මිස මට රැකියාවක් නැතුව බඳින්න කැමැත්තක් තිබුණේ නැහැ. ඒක මගේ අරමුණයි. ඒ හැමදේම දවසින් දවස වෙනස් වුණා. අන්තිමට තීරණය වුණේ දෙගොල්ලොන්ගෙම කැමැත්ත පරිදි එයාව කසාද බඳින්නයි. හැබැයි මට එයා ගැන දුක හිතිලමයි මේ දේට කැමති වුණේ. මම හිතුවා රස්සාවක් කරලා හොඳින් ජිවත් වෙනවා කියලා. මෙයාට පඩියකුත් හම්බවෙනවා කියලා මට ඒ තරං තේරුමක් නෑ. දෙගොල්ලන්ගෙම කැමැත්ත පරිදි විවාහය සිද්ද වුණා. මම එයාගෙ ගෙදරට එක්කගෙන ගියා. ඒ අය සමග සතුටෙන් ජීවත් වුණා. ඒ අතරතුරේදී මෙයා ගෙදර එන්නේ සතියකට වරක් මාසෙකට වරක් පමණයි. මේ වෙලාවේ මගේ මහත්තයාගේ යාලූවෙකුත් පිළිමතලාවේ සිංගර් එකේ වැඩ කරමින් සිටියදී මම ඒ ස්ථානයේ වැඩට යන්න…………………………………..

……………………………. කියලා දුන්නා. ඒ සඳහා වෙනම කෝස් එකක් දුන්නා. මම මේ සියල්ල සිංගර් එකේදි හිතුවටත් වඩා හොඳින් වැඩ ටික නිම කරා. මේ සියල්ල හොඳින් කෙරූ නිසා මම සිංගර් එකේ රැකියාවකුත් ලැබුණා. මේ කාලයේදී මට ලොකුදුව ලැඛෙන්න හිටියෙ. දැන් බැඳලා අවුරුද්දක් පමණ වෙනවා. මේ කාලයේදී යුද හමුදාවේ ෆෝම් වගයක් පුරවනවා ගෙවල් නොමැති අයට ගෙවල් දෙනවා කියලා. මේ ෆෝම් පිරවීමෙන් අපට මාස තුනකින් කුරුණෑගල ඉබ්බාගමුවේ ගෙයක්ද ලැබුණා. අපේ දුවත් එක්ක අපි දොගොල්ලොගෙම කට්ටිය ඇවිල්ලා අපිව ගෙදර පදිංචියට ආවා. අපි ඇවිල්ලා ටික කාලයක් යනකං මගේ තනියට මගේ ඇන්ටි ගෙදර නතර කර ගත්තා. මම කවදාවත් තනියම ගෙදරක ඉඳලා නෑ. මොකද මහත්තයා රැකියාවට යන නිසා. මෙහේ හරි රස්නෙයි. අමුතුම පරිසරයක්. අඳුරන කට්ටියත් අඩුයි. මම වැඩිය පිරිමි අය සමග කතා කරලත් නෑ. ටික කාලයක් යන විට මේ සියල්ල හොඳින් සිදුවුණා. හැබැයි අපේ ගෙවල්වල අය නුවර ඉඳලා මෙහෙට එන්න වැඩිය කැමතිත් නෑ. වෙලාවකට අපි දෙන්නට බනිනවා. මෙහෙට මොනවදට ආවේ කියලා. දැන් ලොකු දුවට අවුරුදු පහයි. මේ ගමේම පෙර පාසලට දාගත්තා. මේ දවස්වල ලොකු දුවට හොඳම පාසලකුත් ලැබුණා. මගේ මහත්තයට මේ වන විට වුරුදු 12 ඉවර වී වෛද්‍ය හේතු මත අයින් වෙන්න අවස්ථාව ලැබුණා. මෙයා යුද හමුදාවෙන් අස්වෙලා ගේත් සාමන්‍ය විදියට හදාගත්තා. මොකද ගෙදරින් කවුරුත් මෙහේ ආවාම ඉන්න කැමති නැති නිසා. දැන් දෙවෙනි දුවත් හම්බවෙන්න. එයා ලැබුණෙත් කුරුණෑගල රෝහලෙයි. අපි බැඳලා ඒ වන විට අවුරුදු 8 ක් පමණ වෙනවා. ගෙදර වැඩ කරන වෙලාවේ වුනත් අපි දෙන්නා එකතු වී උයන පිහන වැඩ කටයුත =ටික සතුටින් කරගෙන යනවා. වත්තෙ පිටියෙ වැඩ ටික තනි නොතනියට ලඟ ඉන්න නිසා සතුටින් කරගෙන යනවා.. ගෙදරට ගෙනෙන බඩු ටික ලයිට් බිල්, ටෙලිෆෝන් බිල්, පාසල්වලට යන වැඩ කටයුතු සියල්ල මම අදටත් කරන්නේ එයාමයි. මාව තනියම කොහෙවත් යවන්නෙ නෑ. මගේ අම්මල කියලා තිබුණේ මාව හොඳින් බලාගන්න කියලයි. ඒ වගේම අදත් මාව හොඳින් බලාගන්නවා. අපේ පවුලේ සියලූ දෙනාට මෙයාව හොඳින් බලාගෙන……………………………

 

දැන් අවුරුදු 22 ට වැඩියි අපි බැඳලා. කවදාවත් අපි රණ්ඩුවෙලා නෑ. හැමදේම අපි දෙන්නා එකතු වෙලා කතා බහ කරගෙන සියලූ දේම සතුටින් හදාගන්නවා. දැන් මගේ ලොකු දුවට අවුරුදු විස්සයි. එයා උසස් පෙල කරලා ප්‍රතිඵල බලාපොරොත්තුව ඉන්නවා. එයාටත් අපි උපරිම විදියට වියදම් කරලා උගන්නලා තියෙනවා. එයත් කිසිම ප්‍රශ්නයක් නොමැතිව ඉගෙනුම් කටයුතුවල සිටිනවා. එයා ගෙදර පිරිමි වගේ හැමදේම කරනවා. දෙවෙනි දුවත් 9 යේ ඉන්නෙ. එයත් පාසලේ වැඩ හොඳින් කරගෙන යනවා. පුතා බාලම. එයා තුනේ පන්තියේ ඉන්නේ.

 

හැබැයි මගේ මහත්තයට දැන් අවුරුදු 42 ක් පමණ වෙනවා. දැන් එයාට හරියට වැඩක් පලක් කරගන්න  බැහැ. අපි ඇවිදින්න ගියත් එයා වාහනේට වෙලා ඉන්නවා අපි ඇවිදලා එනකං. ඒ වෙලාවට දුක හිතෙනවා. ගෙදර තියෙන ගහක ගෙඩියක් කඩන්න ගියත්, වැහි වෙලාවට වහලය තෙමෙන විට,  උඩ තියෙන ටැංකිය සුද්ද කරන විට, සෙල්ලම් කරන්න යන විට, ගමනක් බිමනක් යනවිට මේ හැම වෙලාවෙම කකුලේ අඩුපාඩුව දැනෙනවා. මේ හැමදේටම ගෙදර තාත්තා වගේ වැඩ කරන්න බලන්නේ මගේ ලොකු දුවයි. එයා කොල්ලා වගේ. පොඩි දුවත් ඉගෙන ගන්න දක්සයි. අපි මේ වෙනකොට ළමයින්ට මුදල් ඉතුරුකරලා ගෙවල් දොරවල් හදලා දරුවන්ගෙ යුතුකම් ඉෂ්ට කරලයි තියෙන්නෙ. දැන් මහත්තයට හම්බවෙන කකුල් හොඳ මදි. අවුරුද්දකට දෙවතාවක් පමණ රාගම යනවා කකුල් හදන්න. ඒවා ශක්තිමත් ඒවා නොවේ. ඒවත් දැන් ක්‍රමානුකූලව නෑ. අරගෙන එනවට වඩා ඉක්මනට කැඩෙනවා. කකුල දාලම කකුලේ තුවාල.ඒ වේදනාව ගෙදර සියලූ දෙනාට දැනෙනවා. කොච්චර හොඳින් හිටියත් එක මොහොතකින් සතුට ඉවර වෙනවා. මහත්තයා වැටුණ අවස්ථාවක ටොයිලට් එකට යන අවස්ථාවක වුණත් තුවාලයක් වුන අවස්ථාවක වුනත් මේ වේදනාව සියලූ දෙනාට බලපානවා. අපි වැඩිය ඇවිදින්න යන්නවත් කැමති නැහැ. මොකද කොමඩ් එකක් වත් නැතුව එම අවශ්‍යතාවයක් හෙම කරගන්න ලැඛෙන්නේ නැති නිසා. ඒ කෙසේ වෙතත් දැන් දරුවන් දිහා බලලා සතුටින් ඉන්නවා.

 

 

நான்  21வயதில் திருமணம் முடித்தேன். அது பெற்றோரினால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தது. அந்த நேரம் இலங்கையில் மிகக் கொடூரமான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எனது கணவர் இராணுவத்தில் இருந்தார்.  யுத்தம் தீவிரம் பெற்றிருந்த நேரம் அது. நிலக்கண்ணி வெடிப்பில் சிக்குண்டு எனது கணவர் கால் ஒன்றை இழக்க நேரிட்டது. அப்பொழுது நான் முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை.

அவரைப் பார்க்க கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றிற்கு நான் கூட்டிச்செல்லப்பட்டேன். அவரைப் பார்த்தவுடன் நான் பயந்துபோனேன். ஒரு மணித்தியாலத்தின் பின்னர்தான் அவரது படுக்கையைப் பார்த்தேன். சில மாதங்களின் பின்னர் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். என்னைப்பார்க்க எனது வீட்டிற்கு அவர் அழைத்துவரப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களுடன் அவர் வந்திருந்தார். அவர் என்னுடன் கதைத்தார். அவர் மீது நான் அனுதாபம் கொண்டேன்.  திருமணத்திற்கு முன்னர் நல்ல முறையில் கல்வி கற்று நல்லதொரு தொழிலைப் பெறுவதே எனது எதிர்பார்ப்பாக இருந்தது. தொழில் செய்யாமல் எனக்கு திருமணம் புரிவதற்கான தேவையிருக்கவில்லை.

 

அதுதான் எனது இலக்காக இருந்தது. ஆனால் அனைத்தும் படிப்படியாக மாறிவிட்டது. இறுதியில் இரு வீட்டாரும் நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தனர். அவரின் மீதுள்ள அனுதாபத்தால் நானும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டேன். நான் தொழில் செய்து நல்ல முறையில் வாழ நினைத்தேன். அவர் சம்பளம் பெறுகின்றார் என்பது தொடர்பில் எனக்கு அக்கறை இருக்கவில்லை. இரு வீட்டாரினதும் ஆசிர்வாதத்துடன் எமக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின் பின்னர் அவரின் இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டேன். அவர்களுடன் நான் சந்தோசமாக வாழ்ந்தேன். மாதத்தில் ஒரு கிழமையில் ஒரு தடவையே அவர் வீட்டிற்கு வருவார். எனது கணவரின் நண்பர்களில் ஒருவர் பிலிமதலாவையில் உள்ள சிங்கர் நிறுவனத்தில் வேலைசெய்துகொண்டிருந்;தார். அங்கு தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்ள நான் விசேடமாக பயிற்றப்பட்டேன்.

 

நான் என்னால் முடிந்தளவு அதனைச் சிறப்பாக செய்தேன். அதனால் சிங்கர் நிறுவனத்தில் எனக்கு தொழில் கிடைத்தது. அப்பொழுது எனது மூத்த மகளை எனது வயிற்றில் சுமந்திருந்தேன். திருமணம் முடிந்து ஒரு வருடம் கழிந்ததன் பின்னர் வீடற்ற இராணுவ வீரர்களுக்கு ஒரு விண்ணப்பம் கேட்கப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்தது. நான் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து எட்டு மாதங்களின் பின்னர் இப்பாகமுவையில் எமக்கு வீடொன்றுக் கிடைத்தது. எனது அத்தைகளில் ஒருவரை என்னுடன் சில நேரங்களில் நான் இருத்திக்கொள்வேன். அதற்கு முன்னர் நான் ஒருபோதும் வீட்டில் தனியாக இருந்ததில்லை. கணவர் தொழிலுக்குப் போனார். இங்கு மிகவும் வெப்பமாக இருக்கிறது. புதிய சூழலாக இருக்கின்றது. தெரிந்தவர்கள் யாரும் இருக்கவில்லை.

 

நான் ஆண்களுடன் கதைத்துப் பழக்கமில்லை. ஆனால், அதன்பிறகு சூழலுக்கு வாழ ஏற்றாற் போல்வாழ நானும் பழகிக் கொண்டேன். ஆனால் எனது குடும்ப உறுப்பினர்கள் கண்டியிலிருந்து இங்கு வருவதற்கு விரும்பவில்லை. இங்கு ஏன் வந்தீர்கள் என்று அவர்கள் எம்மில் குறைபட்டுக்கொள்வர். இப்பொழுது மூத்த மகளுக்கு ஐந்து வயதாகின்றது.

இந்த ஊரிலுள்ள முன்பள்ளி பாடசாலைக்கு அவரைச்சேர்த்துள்ளேன். சிறந்த பாடசாலை ஒன்றிற்கும் அவர் தெரிவாகியிருக்கின்றார். எனது கணவரும் வைத்திய காரணங்களுக்காக இராணுவத்தில் இருந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார். அவர் இராணுவத்தில் இருந்து இராஜினாமாச் செய்ததும் எமது வீட்டை நாம் புதுப்பித்தோம். இங்கு தங்குவதற்கு எமது குடும்ப உறுப்பினர்கள் விரும்புவதில்லை. அதனால் வீட்டைக் கொஞ்சம் புதுப்பிக்க வேண்டியிருந்தது. அப்பொழுது நான் எனது இரண்டாவது பிள்ளையை சுமந்த கர்ப்பிணியாக இருந்தேன். அவரை நான் குருநாகலை வைத்தியசாலையில் பெற்றேன். அப்பொழுது நாம் திருமணம் முடித்து எட்டு வருடங்கள் கழிந்திருந்தன. நாம் இருவரும் இணைந்து வீட்டைச் செய்கின்றோம். பூங்காவில் வேலைசெய்துகொண்டு நாம் இருவரும் நமக்குள் உதவிக்கொள்கின்றோம். கடைக்குச் செல்வது, தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம் செலுத்துவது மற்றும் பிள்ளைகளை முன்பள்ளிக்கு அழைத்துச் செல்வது முதல் எல்லாவற்றையும் எனது கணவரே செய்கின்றார். அவர் என்னை எங்கு செல்வதற்கும் அனுமதிப்பதில்லை. என்னை நல்ல முறையில் வைத்துக்கொள்வதாக எனது பெற்றோருக்கு கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை காப்பாற்றுகின்றார்.

 

எமக்குத் திருமணம் முடிந்து இன்றுடன் 22 வருடங்களாகின்றது. எமக்குள் இதுவரை எந்த சச்சரவுகளும் எற்பட்டதில்லை. கலந்து ஆலோசித்த பின்னர்தான் எந்தத் தீர்மானத்தையும் நாம் எடுப்போம். எனது மூத்த மகளுக்கு இப்பொழுது இருபது வயதாகின்றது. உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுக்காக அவர் காத்திருக்கின்றார். சிறப்பான கல்வியை அவருக்கு முடிந்தளவு நாம் வழங்கியிருக்கின்றோம். ஆண்கள் போன்று எந்த வேலையையையும் அவள் வீட்டில் செய்ததில்லை. இரண்டாவது மகள் தரம் ஒன்பதில் கல்வி கற்கின்றார். அவர் படிப்பில் கெட்டிக்காரி. இளைய மகன் தரம் மூன்றில் கல்வி கற்கின்றார்.

 

கணவருக்குத் தற்போது 42 வயதாகின்றது. கடுமையான வேலைகளை அவரால் இப்பொழுது செய்யமுடியாது. நாம் எங்காவது ஆசுவாசத்திற்காக சென்றால் அவர் வாகனத்திலேயே இருந்துவிடுவார். அப்பொழுது அவரைப்பற்றிய கவலை எனக்கு இருக்கும். ஒரு காலை இழந்த கவலை அவருக்குள் இருக்கிறது. மரத்திலிருந்து காய்களைப் பறிக்கும்போதும், வீட்டுக்கூரை ஒழுகும் போதும், தண்ணீர் தொட்டியை கழுவும் போதும் கால் இல்லாத அங்கவீன ஏக்கம் அவருக்கு ஏற்படுகின்றது. எனது மூத்த மகளே இது எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கின்றார். அவள் ஒரு ஆணைப்போன்றவள். இளைய மகள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி.

 

இதுவரை பெற்றோர் என்றவகையில் எமது பிள்ளைகளுக்காக எல்லா பொறுப்புக்களையும் நிறைவேற்றி காசும் சேமித்துவைத்துள்ளோம். எனது கணவருக்கு தற்போது உள்ள செயற்கை கால் நல்ல தரமானதாக இல்லை. வருடத்தில் இருமுறை நாம் செயற்கைக் காலை திருத்தம் செய்ய ராகமைக்குச் செல்கின்றோம். ஆனால் அவை உறுதியானவைகளாக இல்லை. அவை இலகுவில் உடைந்துவிடும்.

முன்பொருநாள் செயற்கைக் கால் உடைந்ததால் எனது கணவரின் காலும் காயப்பட்டது. அவர் துன்பப்படுவதனைக் கண்டு எமக்கு வேதனையாக இருக்கின்றது. நாங்கள் மிகவும் சந்தோசமாக இருக்கின்றோம் ஆனாலும் சில பொழுதுகளில் சந்தோசங்கள் நழுவுகின்றன. எனது கணவர் குளியலறைக்குச் செல்லும்போது, கீழே விழும் போது, அவர் காயப்படும் போது நாங்கள் கவலையும் அனுதாபமும் கொள்கின்றோம். நாம் இப்பொழுது அதிகம் வெளியே செல்வதில்லை. ஏனெனில் கொமட் இல்லாத குளியலறைகள் இல்லாமல் எனது கணவருக்குக் கஸ்டம் என்பதே. இருப்பினும் எமது குழந்தைகளை நினைத்து நாம் திருப்திக் கொள்கின்றோம்.